Print this page

சென்னையில் சுயமரியாதை. குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931 

Rate this item
(0 votes)

சென்னை நகரத்தில் பல இடங்களில் அநேகமாக நாள் தவறாமல் சுமார் ஒரு மாதமாகப் பொதுக் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கத் தோழர்கள் திரு.பொன்னம்பலனார், குருசாமி, பண்டிதர் திருஞானசம்பந்தர், எஸ்.ராமநாதன், டி.வி.சுப்பிரமணியம் முதலியவர்கள் சாதிப்புரட்டு, சமயப்புரட்டு, காங்கிரஸ் புரட்டு முதலியவைகளை எடுத்துக்காட்டி சமதர்மப் பிரசங்கங்கள் செய்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பொதுஜனங்கள் உற்சாகத்துடன் கூட்டங்களுக்குப் போய் உண்மையுணர்கின்றனர். இவ்வாறு நடைபெறும் பொதுக் கூட்டங்களைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தேசீய பத்திரிகைகள் வெளியிடுவதில்லை. இதற்கு மாறாக கூட்டங்களில் கலகஞ் செய்வதற்காக காலிகளைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன. தேசீயப்புரட்டு வெளியாகி அதனால் பொது ஜனங்கள் விழிப்படையும் போது தேசீயப் பத்திரிகைகளும், தேசிய வாதிகளும் வேறு இதைத் தவிர என்ன தான் செய்யக்கூடும்? 

குடி அரசு - துணைத் தலையங்கம் - 08.11.1931

Read 85 times